27.9 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

கெடா மந்திரி பெசாரை திட்டிய முதியவரை விரைந்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?

நோய்த்தொற்றால் மரணம் அடைவோர் சடலங்களை வைக்க போதுமான கொள்கலன்கள் உள்ளன.
ஆகவே விரைந்து பெயர்களை கொடுங்கள் என்று பொதுமக்கள் நொந்து கொள்ளும் வகையில் கிண்டலடித்த கெடா மந்திரி பெசார் சனுசியை சாடிய 61 வயது முதியவரை விரைந்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்னவென்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கெடா மந்திரி பெசாரை அனைவரும் சாடி கொண்டிருக்கிறார்கள்.
சனுசியை முட்டாள் இன்று திட்டியதற்காக அந்த முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரை விரைந்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்னவென்று டாக்டர் ராமசாமி கேள்வி எழுப்பினார்.
இந்த முதியோருக்கு எதிராக கெடா மந்திரி பெசார் சிறப்பு அதிகாரி புகார் செய்ததை தொடர்ந்து அவர் நேற்று நெகிரி செம்பிலான் லெங்கெங் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் போலீஸ் ஜாமினில் விடப் பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles