25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

புதிய பிரதமரை தேர்வு செய்யும் வகையில் இம்மாத இறுதிக்குள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

🔥 Views : 12
👁 Reading Now : 34

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்க இம்மாத இறுதிக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை காத்திருக்க தேவையில்லை.
புதிய பிரதமரை தேர்வு செய்ய இன்னும் 2 வாரத்திற்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் எம்பிக்கள் ஆதரவை இழந்து விட்டது.
ஆனால் தமக்கு இன்னும் பெரும்பான்மை இருப்பதாக டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறிக் கொண்டிருக்கிறார்.
செப்டம்பர் 6ஆம் தேதி வரை காத்திருக்காமல் இன்னும் 2 வாரத்திற்குள் நாடாளுமன்ற கூட்டப் பட்டால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles