25.5 C
Kuala Lumpur
Thursday, September 17, 2026

Vetri

170 கி.மீ. ‘நன்றி ஓட்டத்தை’ வெற்றிகரமாக நிறைவு செய்த சைட் சாடிக்; இலக்கை மீறி RM361,848 நிதி திரட்டல்!

🔥 Views : 2,548
👁 Reading Now : 25

மூவார்: ஜோகூர் மாநிலத்தின் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், புத்ராஜெயாவிலிருந்து மூவார் வரையிலான 170 கிலோ மீட்டர் தூர ‘நன்றி ஓட்டத்தை’ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

கடந்த ஜூலை 16ஆம் தேதி தொடங்கிய நான்கு நாள் பயணத்தை, அவர் நேற்று காலை மூவார் மஹாராணி சதுக்கத்தில் நிறைவு செய்தார்.

நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் அண்மையில் நீதிமன்றம் தமக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, நன்றிக் கடனாக இந்த ஓட்டத்தை மேற்கொண்டதாக சைட் சாடிக் தெரிவித்தார்.

இந்த ஓட்டத்தின் மூலம், மூவார் தொகுதி மக்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் கல்வித் தேவைக்கான iPad கருவிகளை வாங்க நிதி திரட்டப்பட்டது.

முதலில் RM200,000 நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த இலக்கை பெருமளவில் மீறி RM361,848 வெற்றிகரமாக திரட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுங்கை ரம்பாய் சந்திப்பிலிருந்து இறுதி 17 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடந்து வந்தபோது, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலங்கள் வழியாகச் சென்ற இந்தப் பயணத்தில், ஏராளமான பொதுமக்களும் சைட் சாடிக்குடன் இணைந்து ஓடி தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த நன்றி ஓட்டம், ஒரு தனிப்பட்ட நன்றிக்கடன் நிகழ்வாக மட்டும் அல்லாமல், மூவார் மக்களுக்கான சமூக நல உதவிகளை திரட்டிய மக்கள் இயக்கமாகவும் அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles