
சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்ட நோய்த் தொற்று மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உற்பத்தி துறை சம்பந்தபட்டவை என்று மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மொத்த தொற்று மையங்களில் 96 அல்லது 54 விழுக்காடு தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டவை.
மேலும் 22 தொற்று மையங்கள் அல்லது 12 விழுக்காடு சேவைத் துறை வாயிலாகவும் 9 தொற்று மையங்கள் பொது மக்கள் மத்தியிலிருந்தும் பரவியது என்று அவர் கூறினார்.
