25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மொகிதீன் யாசினை நிராகரிக்கிறோம் கெஅடிலான் சார்பில் 35 எம்பிக்கள் கடிதங்கள் மாமன்னரிடம் ஒப்படைப்பு

🔥 Views : 11
👁 Reading Now : 30

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை நிராகரிக்கிறோம் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த 105 எம்பிக்கள் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் கடிதங்களை ஒப்படைத்துள்ளனர்.
ஜசெக 42, அமானா 11, கெஅடிலான் 35, வாரிசான் 8, பெர்ஜூவாங் 4, பார்ட்டி சரவா பெர்சத்து 2, சைட் சாடிக் மற்றும் மஸ்லி மாலிக் 2, உப்கோ 1 ஆகிய எம்பிக்கள் சார்பில் இந்த கடிதங்கள் மாமன்னரிடம் ஒப்படைக்க ஏற்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்னோ சார்பில் 15 எம்பிக்கள் தங்களது ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளனர்.
ஆக மொத்தம் பிரதமருக்கு எதிராக இப்போது 120 எம்பிக்கள் ஓர் அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கெஅடிலான் சார்பில் 35 எம்பிக்கள் கடிதங்கள் மாமன்னரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் இன்று அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles