
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து இருக்கிறது.
இந்நிலையில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நாளை தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்று உறுதியாக கூறப்படுகிறது.
அவரது பதவி விலகல் கடிதம் தயாராகிவிட்டது. நாளை மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திக்கும்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பான்மை இல்லாததால் பதவி விலகுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று நெருக்கமானவர் தெரிவித்தனர்.
