
எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதிய பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கெஅடிலான் 35 எம்பிக்கள், ஜசெக 42 எம்பிக்கள் மற்றும் அமானா 11 எம்பிக்கள் உட்பட 88 எம்பிக்களை கொண்டிருக்கிறது.
பெர்ஜூவாங் 4 எம்பிக்கள், வாரிசான் 8 எம்பிக்கள், பார்ட்டி சரவாக் பெர்சத்து 2 எம்பிக்கள், உப்கோ 1 எம்பி மற்றும் சைட் சாடிக்,மஸ்லி மாலிக் ஆகியோர் தலா ஒரு 1 எம்பிக்கள் என்று 17 எம்பிக்கள் உள்ளனர்
ஆக மொத்தம் எதிர்க்கட்சி வரிசையில் தற்போது 105 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது என்பதால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய இன்று மிக முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிற்கு இன்னும் ஆறு எம்பிக்கள் ஆதரவு தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
