
உமிழ்நீர் மாதிரியைக் கொண்டு கோவிட் நோய்த்தொற்றை பரிசோதிக்கும் கருவிகளை 10 வெள்ளிக்கு தனது தொகுதி மக்களுக்கு புக்கிட் காசிங் தொகுதி சேவை மையம் வழங்குகிறது என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் தெரிவித்தார்.
1,000 கருவிகளை பத்து வெள்ளியில் தொகுதி மக்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்
சந்தையில் நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் மிகக்குறைவான விலையில் இந்த கருவியை வழங்குவதாக அவர் சொன்னார்.
வீட்டிலிருந்தவாறு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சலுகைத் திட்டத்தை தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
