
நாட்டில் இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 34 ஆயிரத்து 415 பேர் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
மேலும் நாட்டில் இதுவரை 1 கோடியே 70 லட்சத்து 76 ஆயிரத்து 440 பேர் முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 78 லட்சத்து 10 ஆயிரத்து 855 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
