28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

தடுப்பூசி திட்டம் தடையின்றி தொடர புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்!

🔥 Views : 6
👁 Reading Now : 34

நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தடையின்றி மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக புதிய அரசாங்கம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கேட்டுக் கொண்டார்.
நேற்று தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இனி அடுத்து வரும் இரு மாதங்கள் முக்கியமான காலகட்டமாகும்.
தேசிய மீட்சித் திட்டத்தில் வகுக்கப்பட்ட இலக்கின்படி வரும் அக்டோபர் மாத த்திற்குள் மலேசியா நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் ன எதிபார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
நாட்டில் பொருளாதாரம் விரைந்து மீட்சியுறுவதற்கு ஏதுவாக அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் திறக்கப்பட வேண்டும். இதன் வழி மக்கள் வருமானத்தை ஈட்டி தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பராமரிக்க இயலும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles