28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

டான்ஸ்ரீ மொகிதீன் பதவி விலகலை தொடர்ந்து இன்று மாமன்னரை சந்திக்கும் நான்கு அரசியல் கட்சித் தலைவர்கள்

🔥 Views : 5
👁 Reading Now : 21

பிரதமர் பதவியை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து 14 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திக்கிறார்கள்.
மாட்சிமை தங்கிய மாமன்னரை இஸ்தானா நெகாராவில் சந்திக்கும் படி முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அம்னோ, பாஸ், ஜசெக மற்றும் பெஜுவாங் கட்சி தலைவர்கள் இன்று இஸ்தானா நெகாராவுக்குச் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலில் இஸ்தானா நெகாராவில் ஆஜராகுமாறு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு அழைப்பு வந்துள்ளது என்று அம்னோ துணைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் ஹசான் முகமது ஹசான் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் அப்துல் ஹடி அவாங் இன்று அரண்மனைக்கு செல்கிறார்.
பெஜூவாங் கட்சி சார்பில் அதன் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் மற்றும் ஜசெக சார்பில் அதன் தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் மாமன்னரை சந்திக்க உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles