25.3 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

பிரதமர் வேட்பாளராக என்னை நான் பரிந்துரைக்கவில்லை டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிக்கு தலைவராக இருக்கும் நான் பிரதமர் வேட்பாளருக்கு என் பெயரை பரிந்துரை செய்யவில்லை என்று டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை 24 அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் நேற்று கவிழ்ந்தது.
இந்நிலையில் இன்று அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது முதல் எனக்கு எதிராக பல்வேறு அவதூறுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்பட்டன.
பிரதமர் வேட்பாளருக்கு என் பெயரை நானே பரிந்துரை செய்து கொண்டதாக அவதூறுகளை பரப்பினார்கள்.
நாட்டில் மிகப்பெரிய அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தபோதும் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு போதும் என் பெயரை நானே பரிந்துரை செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles