25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

துரோகம் என்பது அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 50

நம்பிக்கை துரோகத்தால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதே துரோக்கத்தால்
அழிக்கப்பட்டுள்ளது என மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைவர்
வீ.ராய்டு தெரிவித்தார்.
அரசியலில் தங்களை வளர்த்து விட்ட கட்சிக்கு
துரோகம் செய்து விட்டு,பின்புற வாசல் வழியாக வந்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து சுகம் கண்டவர்களின் அரசாங்கம் இன்று கவிழ்ந்து விட்டது.
மலேசியாவில் நிகழ்ந்துள்ள இந்த அரசியல் துரோகமானது,
உலகத் தலைவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டுமென அவர்
கூறினார்.
மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்திற்கு துரோகம் செய்ய
நினைப்போருக்கு இந்த கதிதான் நேரும்.கடந்த 14 ஆவது பொதுத்தேர்தலில்
நாட்டு மக்களின் ஆதரவோடு வெற்றிப் பெற்ற நம்பிக்கைக் கூட்டணி
அரசாங்கத்தை கவிழ்த்து விட்ட அரசியல் துரோகிகளின் அரசியல் களம் 17
மாதத்தில் கவிழ்த்துள்ளது.
இனி வரும் காலங்களில் அனைத்து
அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டுமென வீ.ராய்டு
நினைவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles