
பெரும்பான்மை இழந்ததால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அவர் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடர்கிறார்..
இந்நிலையில் இன்று அனைத்து கட்சித் தலைவர்களும் மாட்சிமை தங்கிய மாமன்னரை இஸ்தானா நெகாராவில் சந்தித்தனர்.
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங், பெர்ஜூவாங் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் பாஸ் கட்சி துணைத் தலைவர் துவான் இப்ராகிம் ஆகியோர் இன்று மாமன்னரை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
