28.7 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

புதிய பிரதமரை விரைந்து மாமன்னர் நியமிக்க வேண்டும் ஐபிஎப் கட்சி வலியுறுத்து

🔥 Views : 7
👁 Reading Now : 47

மலேசிய அரசியல் சட்ட அமைப்புக்கு ஏற்ப 110 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் பெற தவறியதால் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலகியுள்ளார்.
இவருக்கு பதில் புதிய பிரதமரை விரைந்து மாமன்னர் நியமிக்க வேண்டும் என்று
ஐ.பி.எப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் துரைசாமி கேட்டுக் கொண்டார்.
இதன் மூலம் அரசியல் நெருக்கடி உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
தற்போது நாட்டின் அரசியல் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது என்றும், இது கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார தேக்கநிலைக்கு தீர்வு காண சிறந்த தலைவரை மாமன்னர் பிரதமராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் லோகநாதன் கேட்டுக் கொண்டார்.
ஐ.பி.எப் கட்சியை பொருத்தமட்டில் தொடர்ந்து அம்னோ மற்றும் பரிசான் நேஷனலுக்கு முழு ஆதரவை வழங்கும். எல்லா சூழ்நிலையிலும் தொடர்ந்து அக்கட்சியுடன் பயணிக்கும். பாரிசானில் இணைவது ஐ.பி.எப் கட்சியின் போராட்ட்ம், சான் எம். ஜி. பண்டிதன் காலம் தொட்டு இப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில அரசியல் காட்சிகளைப் போல் நேரத்திற்கு தகுந்தவாறு சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாத கட்சி அல்ல நாங்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles