
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்து நாளை 4 மணிக்குள் சத்தியப் பிரமாணத்துடன் இஸ்தானா நெகாராவில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் டத்தோ அஸாஹர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த வகையில் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய அம்னோ எம்பிக்கள் கூட்டம் இன்றிரவு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் 38 அம்னோ எம்பிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை நிராகரித்த 15 அம்னோ எம்பிக்களில் 10 எம்பிக்கள் இப்போது டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு ஆதரவு தர மறுத்து வருகிறார்கள்.
