
அம்னோ எம்பிக்கள் சார்பில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமர் வேட்பாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
நேற்றிரவு நடைபெற்ற அம்னோ மற்றும் தேசிய முன்னணி எம்பிக்களின் பரபரப்பான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய 115 எம்பிக்கள் இப்போது இதே ஆதரவை இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு வழங்கியுள்ளனர்.
இதற்கு முன்னர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை 15 அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது.
இதனால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
