
புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை வெளியே குறிப்பாக சாக்கடை அருகில் நோய்த்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காணொளிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு சிகிச்சை பெறும் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நோய்த்தொற்று மதிப்பீட்டு சோதனைக்காக இந்த தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த நோயாளிகள் இதர மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பினாங்கு மாநில சுகாதார இலாகா அறிவித்துள்ளது.


