34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மொகிதீன் யாசின் வீழ்ச்சிக்கு என்னை குற்றம் சாட்டுவதா? டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஆவேசம்

நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் தோல்வி கண்டதால் பிரதமர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் விலகினார்.
இவரின் பதவி விலகலுக்கு உண்மையான காரணத்தை அவரது ஆதரவாளர்கள் உணரவேண்டும்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டதால் அவர் எம்பிக்களின் ஆதரவை இழந்தார் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வீழ்ச்சிக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
எனது அதிகார வெறியினால் அவர் பதவி விலக நேரிட்டது என்று சிலர் கூறுவதையும் அவர் கடுமையாக சாடினார்.
17 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் அவரால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles