31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

நாட்டுக்கும் மக்களுக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒளி விளக்காய் திகழ வேண்டும்

🔥 Views : 27
👁 Reading Now : 69

மலேசிய அரசியல் களத்தில் அனைத்து தகுதியும்,அனுபவமும்
கொண்டுள்ள எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான்
நாட்டின் அடுத்தப் பிரதமர் என நிபோங் திபால் நாடாளுமன்றத்தில் பிகேஆர்
கட்சியின் முன்னோடியான எஸ்.சஞ்சய் ராமா கூறினார்.
இவர் பிரதமராக
தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டில் மற்ற சமூகங்களுக்கு ஈடாக இந்திய சமூகத்துக்கும் அவரால் நிச்சயம் உதவ முடியும்.
மேலும் இந்நாட்டு இந்திய சமுதாயத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறை அவரின் அரசியல்
வாழ்க்கையில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது என்றார்.
அண்மைய சில


ஆண்டுகளாக நாட்டில் அரசாங்கத்தை எடுத்து நடத்தி தலைவர்களால்
இந்தியர்களுக்கு முறையான வாய்ப்புகள் கிடைக்காமல் போனது
உண்மையிலும் உண்மையாகும்.
எனவே நாட்டின் அரசியல்போராட்டத்தில்
மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும்,பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 9 ஆவது பிரதமராக தேர்வு செய்யப்பட்டு இந்நாட்டு மக்களுக்கு ஒரு ஒளி விளக்காக
பிரகாசிக்க வேண்டுமென சமூக சேவையாளரும்,அரசியல் போராட்டவாதியுமான எஸ்.சஞ்சய் ராமா குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles