26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

எதிர்க்கட்சிகளுக்கு அரண்மனையில் இருந்து அழைப்பில்லை

🔥 Views : 7
👁 Reading Now : 63

அரண்மனையின் இன்றையக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைக்கப்படவில்லை. யாரை பிரதமராக ஆதரிக்கிறீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டதன் தொடர்பில் அடுத்தக்கட்ட நகர்வு ஆரம்பமாகி உள்ளது. இது குறித்து இன்று அரண்மனையில் கூட்டப்பட்டுள்ள கூட்டத்திற்கு எதிரணியைச் சேர்ந்த கட்சிகள் அழைக்கப்படவில்லை.

இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை ஆதரிக்கும் கட்சிகளுக்கு மட்டும் நேற்று இரவு அரண்மனையில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அம்னோ உதவித் தலைவரான இஸ்மாயில் பிரதமராக வரவேண்டும் என்று 114 எம்பி-க்களும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு 105 நாடாளுமன்று உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நடைமுறையில் பங்கு கொள்ளாத ஒரே நாடாளுமனற உறுப்பினர், குவா மூசாங் மக்கள் பிரதிநிதி தெங்கு ரசாலி ஹம்சா.

இந்த சூழலில், வெற்றிக் கோட்டை எட்டி இருக்கும் தரப்பினரை மட்டும் அழைத்து அதன் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக இந்தக் கூட்டத்தை ஆட்சியாளர் கூட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles