25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மலாய் ஆட்சியாளர்கள் மன்ற கூட்டத்திற்கு பின்னர் புதிய பிரதமர் பெயரை மாமன்னர் அறிவிக்கலாம்

மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்திற்கு பின்னர் புதிய பிரதமரின் பெயரை மாட்சிமை தங்கிய மாமன்னர் அறிவிக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 2.30 மணிக்கு மேல் இஸ்தானா நெகாராவில் மலாய் ஆட்சியர்களின் மன்றக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்திக்குப் பின்னர் புதிய பிரதமர் பெயர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 மாதங்கள் மட்டுமே பிரதமராக பதவி வகித்த டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கடந்த வாரத்தில் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பட்டிருக்கிறார். இவருக்கு 114 எம்பிக்கள் ஆதரவு கிடைத்திருப்பதாக அம்னோ வட்டாரம் கூறுகிறது.
பக்கத்தான் ஹரப்பான் சார்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவருக்கு 105 எம்பிக்கள் ஆதரவு கிடைத்துள்ளன..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles