29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கோடைவெயிலை சமாளிக்க மண்பானைகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்

🔥 Views : 7
👁 Reading Now : 54

தஞ்சை மாவட்டத்தில் கோடைவெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடைவெயிலை சமாளிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, குளிர்பானங்கள், தர்ப்பூசணி பழங்கள் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது உள்ள காலக்கட்டத்தில் பிரிட்ஜ், குளிர்சாதன பொருட்களால் பொதுமக்கள் மண்பானைகளை மறந்து விட்டனர். ஆனாலும் கோடைக்காலங்களில் மண்பானைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்து வருகி்ன்றனர்.
தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கவிட்டதால் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை ரோடு, சின்ன மார்க்கெட், பெரிய மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பானை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோடைவெயிலை சமாளிக்கவும், குடிநீரை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்காகவும் அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் அதிக அளவில் மண்பானைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதுபற்றி மண்பாண்ட வியாபாரிகள் கூறுகையில்,
நாங்கள் மண்பானைகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம். அவற்றை பாதுகாப்பது மிகவும் சிரமம். ஏதாவது ஒன்று உடைந்து விட்டால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி விடும். பொங்கல் பண்டிகையின் போதும், அதன் பின் கோடைக்காலத்திலும் மண்பானை விற்பனை விறு, விறுப்பாக நடைபெறும். வெயில் காலத்தில் மண்பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தால் ஐஸ் தண்ணீர் போல் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் பெரும்பாலான பொதுமக்கள் கோடைவெயிலை சமாளிக்க ஆர்வமுடன் மண்பானையை வாங்கி வருகி்ன்றனர் என்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles