29 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை குறை சொல்வதை நிறுத்துங்கள்!

🔥 Views : 28
👁 Reading Now : 40

போதுமான எம்பிக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வர முடியாமல் போனதால் அவர் மீது குறை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் அவருக்கு ஒட்டுமொத்தமாக 105 எம்பிக்கள் வாக்குகள் கிடைத்துள்ளன.
அதேசமயம் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் எம்பிக்கள் சார்பில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு 114 வாக்குகள் கிடைத்துள்ளன.
இன்னும் 6 வாக்குகள் கூடுதலாக கிடைத்திருந்தால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
கூடுதல் எம்பிக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக இப்போது அவர் மீது குறை கூறுவது சரியல்ல.
அவர் எந்தத தவறும் செய்யவில்லை.
நம் ஒருவர் மீது குற்றம் சொல்வதை விடுத்து அடுத்த இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெறும் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் இப்போது ஓர் அணியில் இருப்பதால் வெற்றியை நோக்கி செல்லும் முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles