25.5 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

புதிய அரசாங்கத்திற்கு என்ன பெயர்? அம்னோ – பெர்சத்து இடையே பனிப்போர்

🔥 Views : 27
👁 Reading Now : 39

நாட்டின் ஒன்பதாவது பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று பதவியேற்றுள்ளார்.
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு முழு ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ள பெர்சத்து கட்சி தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்தை தொடர்ந்து டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வழி நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தேசிய முன்னணி அல்லது பெரிக்கத்தான் நேஷனல் பாணியில் அரசாங்கத்தை வழி நடத்த போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் புதிய அரசாங்கத்துக்கு பெயர் வைப்பதிலும் இரு கட்சிகளிடையே பனிப்போர் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் 50 எம்பிக்களும் தேசிய முன்னணி சார்பில் 42 எம்பிக்களும் உள்ளனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles