
கிள்ளானில் செயல்பட்ட ஐந்து தடுப்பூசி மையங்களை முடுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முடிவு குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
பண்டமாரான், பிரிமியர் ஹோட்டல், ஹாக்கியன் மண்டபம், சாக்கோ காக்காய் மண்டபம் மற்றும் கிளப் டிஎன்பி ஆகிய இடங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
ஒவ்வொரு தடுப்புசி மையத்திலும் தினசரி 8,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்றுடன் இந்த ஐந்து தடுப்பூசி மையங்களும் முடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என்றார் அவர்.
கிள்ளான் வையண்டன் ஹோட்டலில் செயல்படும் தடுப்பூசி மையத்திற்கு அனைவரும் செல்ல வேண்டும்.
இங்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் புதிய நோய்த்தொற்று திரல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரித்தார்.
