28.5 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

கடுமையான தூர்நாற்றத்தினால்செராஸ் பூலாவ் பினாங்கு குடியிருப்பாளர்கள் பெரும் அவதி

🔥 Views : 8
👁 Reading Now : 27

கழிவுநீர் மற்றும் மோசமான தூர் நாற்றத்தினால் செராஸ் பூலாவ் பினாங்கு குடியிருப்பாளர்கள் பெரும் அவதியை எதிர் நோக்கி வருகிறார்கள்.
செராஸ் ஈக்கான் மாஸ் வட்டாரத்தில் பூலாவ் பினாங்கு குடியிருப்பு அமைந்துள்ளது.
ஐந்து மாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
சமீப காலமாக இவர்கள் கடுமையான தூர் நாற்றத்தினால் அவதியுற்று வருகிறார்கள்.
கழிவுநீர் குழாய்கள் பழுதடைந்து இருப்பதால் அதன் மூலம் வெளியேறும் கழிவுகள் இங்குள்ள மக்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளன.
பலமுறை புகார் செய்தும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குடியிருப்பார் அலெக்ஸ் என்பவர் தெரிவித்தார்.
கழிவுநீர் நாற்றத்தால் இங்குள்ள மக்கள் பல மாதங்களாக பெரும் அவதியை எதிர்நோக்கி வருகிறார்கள்.
5வது மாடியில் இருந்து கசியும் கழிவு நீர் துர்நாற்றம் மிக மோசமாக இருக்கிறது.
இங்குள்ள மக்கள் பலமுறை புகார் செய்தும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக அவர் சொன்னார்.
பழுது அடைந்துள்ள கழிவுநீர் குழாய்களை பழுது பார்க்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அலெக்ஸ் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles