
நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் நகர்வுகளை பார்க்கும் போது மக்களின் போராட்டம் தகர்ந்து இருப்பதாக பிஎஸ்எம் கட்சியின் துணைத்தலைவர் எஸ். அருட்செல்வன் வேதனையுடன் தெரிவித்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று ஆகஸ்ட் 3ஆம் தேதி அம்னோ உச்சமன்றம் அறிவித்தது.
மேலும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை 15 அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமர் பதவியை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் பல்வேறு நாடகங்கள் அரங்கேறின.
தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் எம்பிக்கள் ஆதரவு வழங்கியதை தொடர்ந்து இப்போது புதிய பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பதவியில் உள்ளார்.
பின்புற வழியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு பதில் பக்கத்தான் ஹரப்பானை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தோல்வி கண்டிருக்கிறார்.
பிகேபியை பற்றி டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பையும் நீண்டநாள் பிரதமராக வருவதற்கு காத்திருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பற்றியும் குறைகூறல்கள் தொடர்கின்றன.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்க முடியாமல் போனதால் மாட் சாபுவும் ஜசெகவும் மனமுடைந்து உள்ளன.
உண்மையிலேயே இங்கு தோல்வி கண்டு இருப்பது மக்களின் போராட்டம் ஆகும் என்று அருட்செல்வன் தெரிவித்தார்.



