25.3 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அமைச்சர் பதவிகளை வழங்கும் படி நாங்கள் கேட்கவில்லை!

🔥 Views : 9
👁 Reading Now : 23

புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வழங்கும்படி நாங்கள் யாரும் கேட்கவில்லை என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் குறிப்பிட்டார்.
நாட்டில் நோய்த்தொற்றை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் எங்களோடு இணைந்து பணியாற்றலாம். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கருத்துரைத்த முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் அமைச்சர் பதவிகளை வழங்கும்படி நாங்கள் யாரிடமும் கேட்கவில்லை.
அப்படி அமைச்சர் பதவி கொடுத்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்..
இந்த புதிய அரசாங்கம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது தெரியாது.
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வந்த டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இப்போது பிரதமராக இல்லை.
மற்றொரு கதவுபுற வழியாக ஆட்சிக்கு வந்திருக்கும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆட்சி எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்பது தெரியாது.
அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்துடன் ஒத்துழைப்போம். ஆனால் அமைச்சர் பதவிகளை வழங்கும் படி நாங்கள் யாரிடமும் கேட்கவில்லை என்று அவர் பதிலடியாக அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles