25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தினார் அஸாலினா ஒஸ்மான்

🔥 Views : 5
👁 Reading Now : 66

நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததை டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் இன்று உறுதிப்படுத்தினார்.
துணை சபாநாயகர் பதவியிலிருந்து விலகும் தமது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்றத்திடம் அஸாலினா சமர்ப்பித்து விட்டதாக அவர் கூறினார்.
வரும் நாடாளமன்ற கூட்டத்தொடரில் தான் ஓய்வெடுக்க விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜொகூர் பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் புதிய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தமது அமைச்சரவை பட்டியல் தயார் செய்து கொண்டிருக்கும் வேளையில் அஸாலினா ஒத்மான் தமது துணை சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து இருக்கிறார்.
இதன்வழி அவர் அமைச்சராக பொறுப்பேற்பது உறுதி என்று வர்ணிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles