
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் மைபிபிபி கட்சி மூலம் தொடர்ந்து உணவு கூடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கப்பட்டதாக மலேசிய இந்திய சமூக நல அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் டாக்டர் கே.எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ மெக்லின் ஆதரவோடு ஏழை மக்களுக்கு உதவிகள் கிடைத்த வண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்தார்
தோமஸ் சைமன் மற்றும் சத்தியன் ஆகியோரின் உதவியோடு வசதி குறைந்த மக்களுக்கு உணவு உடைகள் வீடு தேடி சென்று ஒப்படைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.



