25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

டத்தோஸ்ரீ முகமட் ஹசானனுக்கு நிதியமைச்சர் பதவி? உள்நோக்கம் என்ன பிஎஸ்எம் கட்சி கேள்வி

🔥 Views : 8
👁 Reading Now : 51

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
தலைமையிலான அமைச்சரவையில் அம்னோ தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு பிரச்சாரத்தை முன்னெடுத்து உள்ளது.
அனுபவம் மற்றும் ஆற்றல் நிறைந்த ஒருவரை நிதி அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் இந்த பதவிக்கு இவர் பொருத்தமானவர் என்று அம்னோ இளைஞர் பிரிவு அறிவித்துள்ளது.
இதுபற்றி கருத்துரைத்த பி.எஸ்.எம். கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ஷாரன் ராஜ், டத்தோஶ்ரீ முகமட் ஹசானை நிதியமைச்சராக கொண்டு வரும் நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்னர் நிதி அமைச்சராக இருந்த தெங்கு ஷப்ருல் மீது அம்னோ மனநிறைவு கொள்ளவில்லை.
அந்த அடிப்படையில் இப்போது புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ முகமட் ஹசானை நிதி அமைச்சராக கொண்டுவர அம்னோ இளைஞர் பிரிவு பாடுபடுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles