25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தினால் நெகிரியில் நோய்த்தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது

🔥 Views : 11
👁 Reading Now : 35

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மக்களுக்கு அதிக அளவில் விரைந்து தடுப்பூசி போடப்படுவதால் நோய்த்தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் இன்று ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் நெகிரி மாநிலத்தில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்தொற்று எண்ணிக்கை பதிவானது.
ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 478 ஆக பதிவானது.
மேலும் நேற்று 11 பேர் மட்டுமே இந்த நோய்க்கு பலியானார்கள்.
கடந்த வாரத்தில் மரண எண்ணிக்கை எளிதாக இருந்தது என்று அவர் சொன்னார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 130 தடுப்பூசி மையங்களில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதன்வழி மாநிலத்தில் நோய்த்தொற்று படிப்படியாக கட்டுப்படுத்த முடிகிறது.
தனியார் மருத்துவமனையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீட்டிலேயே சென்று தடுப்பூசி போடப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பெரும்பாலான மக்களுக்கு முழுமையான தடுப்பூசி போடப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles