25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

தமிழ்ப்பள்ளிகள் உட்பட 703 பள்ளிகளுக்கு விரைந்து மானியம் வழங்கப்படும்

🔥 Views : 6
👁 Reading Now : 29

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் 703 பள்ளிகளுக்கு விரைந்து மானியம் வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார்.
இதுவரை 703 பள்ளிகளிலிருந்து விண்ணப்பம் கிடைத்துள்ளன.
462 சமயப் பள்ளிகள், 121 சீனப் பள்ளிகள் மற்றும் 101 தமிழ்ப் பள்ளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும் என்று கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கி ஹியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி இவ்வாறு தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட இந்த 703 பள்ளிகளுக்கு விரைந்து மானியம் வழங்கப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles