25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சிக் இன்சைட் மலேசிய சங்கம் சார்பில் மாதந்தோறும் 2,500 குடும்பங்களுக்கு உணவு கூடைகள்

🔥 Views : 10
👁 Reading Now : 26

நாட்டில் துடிப்பாக செயல்பட்டு வரும் சிக் இன்சைட் மலேசிய சங்கம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவகைகளில் உதவிகளை புரிந்து வருகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான வசதி குறைந்த மக்களுக்கு இந்த சங்கம் உணவுக் கூடைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் 2,500 குடும்பங்களுக்கு இந்த சங்கம் உதவி புரிந்து வருகிறது.
இனம், சமயம் பார்க்காமல் கஷ்டப்படும் மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவதில் இந்த சங்கம் முன்னோடியாக திகழ்கிறது.
இந்த ஆகஸ்ட் மாதத்திலும் 2,500 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கியுள்ளது.
அடுத்த மாதத்திலும் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகளை வழங்குவோம் என்று சிக் இன்சைட் மலேசிய சங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles