25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

குயில் ஜெயபக்தியின் 2021 மாணவர் விழா!

🔥 Views : 8
👁 Reading Now : 52

குயில் ஜெய பக்தியின் 16ஆம் ஆண்டுகள் மாணவர் விழா மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு முதல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று வெற்றி மழையில் நனைந்த இந்த விழா இவ்வாண்டு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குயில் ஜெயபக்தி நிறுவனர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் தெரிவித்தார்.
இவ்வாண்டு குயில் விழா புத்தம் புது இயல்புடன் பல்வேறு போட்டிகளுடனும் 2 லட்சம் வெள்ளி ரொக்கப்பரிசு, கண்கவர் பரிசுப் பொருள்கள் வெற்றியாளர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.
நாடெங்கிலும் உள்ள தமிழ்ப்பள்ளி மற்றும் மாணவர்களிடையே சகோதரத்துவ
உணர்வை வளர்த்து அதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரிடையே நிரந்தரமான
ஒற்றுமையை உறுதி செய்யும் வகையில் இந்த போட்டி அமைந்துள்ளது.
18 ஆகஸ்டு தொடங்கி 31 ஆகஸ்டு வரை மின்னியலில் வழி போட்டிகள் நடைபெறும். நீதிபதிகளால் தேர்தெடுக்கப்பட்ட 15 படைப்புகள் சமூக வலைத்தளத்தில் பொது வாக்களிப்புக்கு உட்படுத்தப்படும். ‘விருப்பங்கள்’ (likes) அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
குயில் 30ஆம் ஆண்டில் தடம் பதிப்பதை முன்னிட்டு செப்டம்பர் 30ஆம் தேதியில் வெற்றியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.
கட்டுரைப் போட்டி (மலாய், தமிழ், ஆங்கிலம்), பேச்சுப் போட்டி, எழுச்சிப்பாடல் பாடும் போட்டி, ஓவியப் போட்டி, பரதம் (Semi-Classical Dance), ஆத்திசூடி ஒப்புவித்தல், திருக்குறள் ஒப்புவித்தல், புத்தாக்கப் போட்டி (STEM) ஆகிய போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மேல் விபரங்களுக்கு www.jayabakti.com எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles