
மொத்தம் 40 குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மீதான வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடைபெற வேண்டுமென்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் யாஸிட் முஸ்தபா இன்று உத்தரவு பிறப்பித்தார்.
அரசாங்கத்தின் வெளிநாட்டு விசா முறைக்காக ஆஸ்ட்ரா கிரானா என்ற நிறுவனத்தில் இருந்து கையூட்டு பெற்றதாக அவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார்.
மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு விசாரணை கட்டாயம் அடுத்த வாரம் நடைபெற வேண்டுமென நீதிபதி முகமட் யாஸிட் முஸ்தபா கேட்டுக்கொண்டார்.
கீழே விழுந்ததால் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பதாக அவரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



