25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அஸ்மின் அலிக்கு துணை பிரதமர் பதவியா?தற்கொலைக்கு சமம்!

🔥 Views : 6
👁 Reading Now : 40

புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் அஸ்மின் அலிக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட்டால் அது தற்கொலைக்கு சமம் என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி தெரிவித்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது முதல் அஸ்மின் அலிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
அன்று முதல் இன்றுவரை நெட்டிசன்கள் அவரை கடுமையாக குறைகூறி வருகிறார்கள்.
அவருடைய பங்களிப்பும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
ஆகவே அவரை துணைப் பிரதமராக நியமித்தால் அது தற்கொலைக்கு சமமாகும் என்று அவர் எச்சரித்தார்.
புதிய அரசாங்கத்தில் துணைப் பிரதமராக அஸ்மின் அலி நியமிக்கப்படலாம் என்று ஆருடங்கள் கூறப்படும் வேலையில் இதற்கு டத்தோ புவாட் ஸார்காசி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles