25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

18 வயதில் வாக்குரிமை மற்றும் கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தைஅமல்படுத்துங்கள்!

🔥 Views : 12
👁 Reading Now : 50

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அரசாங்கத்தில் 18 வயதில் வாக்களிக்கும் உரிமை வழங்குதல் மற்றும் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தை அமல்படுத்துமாறு பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களிலிருந்து மக்களை காப்பாற்ற சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம்.
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான முந்தைய அரசாங்கம் கோவிட் -19 பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வில்லை.
ஆகவே புதிய அமைச்சரவையில் மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக மேலே எழுப்பப்பட்ட பிரச்சினைகளை பிரதமர் பரிசீலிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக 18 வயதினர் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
மேலும் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜ.செ.க பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles