25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மக்கள் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; பிரதமருக்கு பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் கோரிக்கை!

🔥 Views : 11
👁 Reading Now : 57

மக்கள் நலன் பேணும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
நாட்டின் நிர்வாகம் முறைப்படி நடப்பதை சரி செய்ய வேண்டும். நீதித்துறை சுயேட்சையாக செயல்பட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மக்கள் நலன் பேணும் திட்டங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இது போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு எதிராக நடத்தப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் எந்த பிரச்சினையும் கொடுக்க மாட்டோம் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் தெரிவித்தனர்.
புதிய பிரதமரை அவரது அலுவலகத்தில் ஒரு மணிநேரம் சந்தித்த பின்னர் அவர்கள் நிருபர்களிடம் இதனை தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles