
எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்படும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிளையும் சந்திக்க டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவு செய்திருக்கிறார்.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பக்கத்தான் ஹரப்பான் இப்போது தயாராகி வரும் வேளையில் இதர கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையும் படி இந்த சந்திப்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுக்கலாம்.
இது தொடர்பில் மிக விரைவில் எதிர்க்கட்சித் தலைவருடன் முக்கிய சந்திப்பு நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
