25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

‘No Anwar-No Dap’ பிரதமரிடம் நகைச்சுவையாக கூறினேன்!

🔥 Views : 9
👁 Reading Now : 32

பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சந்திப்பு நடத்தியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது No Anwar No Dap என்று பிரதமரிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டேன் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அனைத்து தரப்பினரிடமும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் அம்னோ சார்பில் அவர் மட்டுமே.
அவர் என்னுடன் மற்றும் ஜசெகவுடன் சந்திப்பை நடத்தினார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பிரதமராக இருந்த டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் பதவி வழங்க முன்வந்தார்..
இங்கு அமைச்சர் பதவிகளை கேட்க பிரதமரை சந்திக்க வரவில்லை.
நோய்தொற்று கட்டுப்படுத்தவும் பொருளாதாரம் மீட்சி பெறவும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் சந்திப்பை நடத்தினோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles