30.8 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

டத்தோஸ்ரீ அன்வாருடன் ஒத்துழைக்கத் தயார்! வாரிசான் -பார்ட்டி பெர்சத்து சரவா அறிவிப்பு

🔥 Views : 25
👁 Reading Now : 66

அன்வாருடன் ஒத்துழைக்க தயார் என்று சபா வாரிசான் கட்சியும் சரவா மாநிலத்தைச் சேர்ந்த பார்ட்டி பெர்சத்து சரவா அறிவித்துள்ளது.
2018ஆம் முதல் வாரிசான் கட்சி பக்கத்தான் ஹரப்பானுடன் ஒத்துழைக்கிறது.
மேலும் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு அன்வாருக்கு வாரிசானைச் சேர்ந்த எம்பிக்களும் முழு ஆதரவு வழங்கினார்.
நாங்கள் ஆதரவு வழங்கவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை.
பெர்ஜூவாங் கட்சியும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதர் வாங்கியதாக வாரிசான் கட்சி துணைத் தலைவர் டேரல் தெரிவித்தார்.
வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு
எதிர்க்கட்சிகளை சந்திக்க டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முயற்சி எடுப்பது பாராட்டுக்குரியது.
திறந்த மனதுடன் நாங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே பல் இன மக்களை பிரதிநிதிக்கும் பார்ட்டி பெர்சத்து சரவா கட்சியும் சரவா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நலன் கருதி பக்கத்தான் ஹரப்பானுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அதன் தலைவர் வோங் சூன் கோ தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles