30.8 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

பரா ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கம்

🔥 Views : 26
👁 Reading Now : 27

ஜப்பான் தோக்கியோவில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ இன்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
100 மீட்டர் நீச்சல் பிரிவில் பங்கேற்ற இவர் 2 நிமிடம் 16.61 விநாடியில் நீந்தி முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
இப்போட்டியில் சிங்கப்பூருக்கு கிடைத்த முதல் பதக்கமே தங்கப்பதக்கமாகும்.
2016 ரியோ பரா ஒலிம்பிக் போட்டியில் இதே பிரிவில் இவர் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை மியூக்கி வெள்ளிப்பதக்கமும் மெக்சிகோ வீராங்கனை ரமிரெஸ் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இதனிடையே பரா ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்த வீராங்கனை யிப் பின் சியூவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles