25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

இந்தியர்- சீனர்களை இழிவுபடுத்தும் காணொளி!போலீஸ் விசாரணை தேவை!

🔥 Views : 8
👁 Reading Now : 63

இந்தியர்களையும் சீனர்களளையும் சிறுமைப்படுத்தும் வகையில் காணொளி வெளியிட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று இரண்டு ஜசெக இளம் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் இன் இந்திய நிலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் மற்றும் ஜொகூர் பாரு ஜசெக கிளைத் தலைவர் சுரேந்திரன் பலராமன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மலேசிய இந்தியர்களையும் சீனர்களையும் குறிவைத்து சிறுமைப்படுத்தும் காட்சியையும் உரையாடலையும் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ள காணொளிப் பதிவு தொடர்பாக போலீஸார் முழு விசாரணை நடத்த வேண்டும்.
இத்தகைய செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன், சுரேந்திரன் தெரிவித்தனர்.
நாடு 64ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நேரத்தில் இது போன்ற காணொளிகள் தேவைதானா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
பொறுப்பற்ற சிலரின் நடவடிக்கையால் நாட்டில் அமைதி சீர்குலைகிறது.
ஆகவே இது குறித்து போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles