25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பிரதமருடன் முக்கிய சந்திப்பு; எதிர்க்கட்சித் தலைவர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது!

🔥 Views : 7
👁 Reading Now : 49

நாட்டில் கோவிட்-19 நிலைமை சமாளிக்க மாமன்னரின் ஆலோசனையை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர்களான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங், முகமட் சாபு ஆகிய மூவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க
முன்வந்திருப்பது அவர்களின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
இந்த மூன்று தலைவர்க்கும் சமுதாயத்தின் நன்றி. நாடு எதிர்நோக்கும்
கோவிட் பரவல், பொருளாதார மந்தநிலை, மக்களிடையே வேலை வாய்ப்பின்மை அதிகரித்தல், அன்றாட வாழ்வு பிரச்சினையை சமாளிப்பதற்கு
எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமருடன் ஒத்துழைக்க முன்வந்திருப்பது நல்ல முன்மாதிரியாகும் . இந்த ஒத்துழைப்பு அடிதட்டுமக்கள் வரை சென்றடையவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மக்கள் வளமாய் வாழ்வதற்கு இந்த செயல் முன் மாதிரியாக இருக்கிறது என்று ம.இ.கா. மூத்த தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ க குமரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles