
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அறிவித்த புதிய அமைச்சரவை பட்டியல் நான்கு பேர் புதிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தஞ்சோங் காராங் நாடாளமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ நோ ஓமார் தொழில் முனைவர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இதனிடையே பெர்சத்து கட்சி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு இளைஞர் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
