
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தபோது அவரின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பதவியை ராஜினாமா செய்துவிட்டு இரண்டு வாரம் ஓய்வில் இருந்தவர்கள் இப்போது மீண்டும் அமைச்சர்களாக ஆகியிருப்பதை கண்டு ஒட்டுமொத்த மலேசியர்கள் வேதனை அடைகிறார்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் சுட்டிக்காட்டினார்.
புதிய அமைச்சரவை ஆனால் பழைய முகங்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆட்சியில் தங்களது பொறுப்புகளை சரிவர செய்யத் தவறிய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை கண்டு நாங்களும் வேதனை அடைகிறோம் என்று அவர் சொன்னார்.
