
நோய்த்தொற்று தாக்கத்தினால் இவ்வாண்டு நடைபெறவிருந்த வியட்நாம் சீ போட்டி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தப் போட்டி நடத்தப்படுமானால் கூடுதல் பதக்கத்தை வெல்ல மலேசியா ஓட்டப்பந்தய சங்கம் இலக்கு கொண்டிருப்பதாக அதன் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து தெரிவித்தார்.
2019 மணிலாவில் நடந்த சீ போட்டியில் மலேசியா ஓட்டப்பந்தய குழு 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இம்முறை கூடுதல் பதக்கத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.
மலேசியா உயரம் தாண்டும் வீரர் நவ்ராஜ் சிங் வியட்னாம் சீ போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது ஜெர்மனியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் லக்சம்பெர்க்கில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றிருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
