29 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பேரா மந்திரி பெசாருக்கு சட்டமன்றத்தில் ஜசெக பாராட்டு

🔥 Views : 3
👁 Reading Now : 36

எந்தவொரு பாகுபாடும் காட்டாமல், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மானியங்களை வழங்கியிருக்கும் பேரா மாநில மந்திரி பெசார் டத்தோ ஷாராணி முகமட்டின் தலைமைத்துவத்தை வெகுவாகப் பாராட்டுவதாக அவுலோங் தொகுதி ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ங கோர் மிங் கூறினார்.
மாநிலக் கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான மானியங்களை வழங்குவது அவரின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது.
இதன் வழி உயர்ந்த நிலையில் முதிர்ச்சியான அரசியலை வெளிப்படுத்துவதில் பேரா மாநிலம் முதல் நிலையில் இருப்பதை காட்டுகிறது.
பேரா மாநில மந்திரி பெசாரின் இந்த சிறப்பான திட்டம், பேரா சுல்தான் அவர்களின் உரையின் மூலமாக மாநிலம் மற்றும் நாட்டின் அரசியலில் பெரிய திருப்பதையும் காண முடியுமென சட்டமன்ற உரையின் போது பேரா மாநில ஜசெக தலைவருமான ங கோர் மிங் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles